Wednesday, October 19, 2005
இந்த ஆக்கத்தை மற்ற
www.thamizmanam.com வாசகர்களுக்கு பரிந்துரைக்க நட்சத்திரங்களின்மேல் சொடுக்கவும்!
தற்போதைய பரிந்துரை நிலை:
Tuesday, September 27, 2005
இந்த ஆக்கத்தை மற்ற
www.thamizmanam.com வாசகர்களுக்கு பரிந்துரைக்க நட்சத்திரங்களின்மேல் சொடுக்கவும்!
தற்போதைய பரிந்துரை நிலை:
Wednesday, September 14, 2005
ஒரு பறவைப் பார்வை

இன்றைக்கு நான் இருக்கும் இடத்தை 931 அடி உயரத்தில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அருகில் இருக்கும் மரங்கள், சமீபத்தில் திருத்தப்பட்ட சாலையின் நிறமாற்றம், செல்லும் வாகனங்கள் என்று இலகுவாக எல்லாவற்றையும் தெளிவாக அடையாளம் காணமுடிந்ததில் ஒரு பரவசம்.
கூகிள் ஏத் செயலியை நிறுவினால் எல்லோருக்கும் இந்தப் பரவசம் கிட்டும். பூமியை சொடுக்கிக் கொண்டு இலங்கைப் பக்கம் போனால் இதே அளவு தெளிவுடன் பார்க்க முடியவில்லை :( . பாதுகாப்புக் காரணங்களுக்காக அவ்வாறு இருக்கலாம்.
இந்த ஆக்கத்தை மற்ற
www.thamizmanam.com வாசகர்களுக்கு பரிந்துரைக்க நட்சத்திரங்களின்மேல் சொடுக்கவும்!
தற்போதைய பரிந்துரை நிலை:
Monday, September 05, 2005
இக்கொடுமைக்கு யார்? எப்போது மன்னிப்பு கேட்பது?
இக்கொடுமைக்கு யார்? எப்போது மன்னிப்பு கேட்பது? - பழ. நெடுமாறன்
1975 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அவசரகாலக் கொடுமைகளுக்கு 1980 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா மன்னிப்பக் கேட்டார்.
1984 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சீக்கியர்கள் படுகொலை நிகழ்ச்சிக்கு 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பக் கேட்டார்.
1989 ஆம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்ப்படை செய்த அட்டூழியங்களுக்கு யார், எப்போது மன்னிப்புக் கேட்பது?
மிகுதி . . .
இந்த ஆக்கத்தை மற்ற
www.thamizmanam.com வாசகர்களுக்கு பரிந்துரைக்க நட்சத்திரங்களின்மேல் சொடுக்கவும்!
தற்போதைய பரிந்துரை நிலை:
Sunday, September 04, 2005
இந்த ஆக்கத்தை மற்ற
www.thamizmanam.com வாசகர்களுக்கு பரிந்துரைக்க நட்சத்திரங்களின்மேல் சொடுக்கவும்!
தற்போதைய பரிந்துரை நிலை:
Thursday, September 01, 2005
வெளிச்சம் வெளியே இல்லை
எனக்குப் பிடித்த கவிதை.
வெளிச்சம் வெளியே இல்லை....
வீட்டுக்கு வெளியே
ஓர் ஓரமாய்
தயங்கித் தயங்கி
உட்கார்ந்திருக்கிறது
நம்பிக்கை
வெகு நேரமாய்
கவலையும் பயமும்
என்னைக்
கட்டிப் பிடித்துககொண்டு
கட்டிலில்
என்னுடன்
சாயங்காலத்துக்
காற்றுப் போல்
உரிமையொடு
உள்ளே நுழையும்
சலனம்.
விரக்தி-
ஒரு போர்வையாய்
என் தலை முதல்
கால்வரை
போர்த்தியிருக்கும்
வீட்டுக்கு வெளியே
ஓர் ஓரமாய்
தயங்கித் தயங்கி
உட்கார்ந்திருக்கிறது
நம்பிக்கை
வெகு நேரமாய்
் ் ் ்
கவலை
எனக்காக
கண்ணீர் வடிக்க
விரக்தி என்னிடம்
விவரிக்கிறது
முடிந்தது - எல்லாம்
முடிந்து விட்டது.
உன்
முன்னேற்றம் யாவும்
முடிந்துவிட்டது.
தகுதிகளை எடைபோடும்
தராசுகள்
தொலைந்து விட்டதாம்.
முடிந்தது - எல்லாம்
முடிந்து விட்டது.
இனி
மரணந்தான்
உனக்கு
மகிழ்ச்சி கொடுக்கும்!
விரக்தியின்
பேச்சுக்கு
ஒத்து ஊதுகிறது
பெருமூச்சு
வீட்டுக்கு வெளியே
ஓர் ஓரமாய்
தயங்கித் தயங்கி
உட்கார்ந்திருக்கிறது
நம்பிக்கை
வெகு நேரமாய்.
்்்்்்்்்்்
நம்பிக்கையிடம்
சலனமும் பெருமூச்சும்
சண்டை பிடிக்க
பயம் ஓடிச் சென்று
பரிகாசம் செய்கிறது!
'ஐயன்மீர் யாரோ
ஓ . . .
பழைய நண்பரா?
பார்வையாளர் நேரம்
முடிந்துவிட்டது . . .
பயனெதுவும் இல்லை.
போவீர். . . வருவீர்
போய்வருவீர்!'
வேக வேகமாய்
வந்த
விரக்தி
விரட்டுகிறது!
'அவசியம்
பார்க்க வேண்டும் என்று
அடம் பிடிக்காதே'
அவரோ
நூறு வகையான
நோய்களில்
நொந்து போய்ப்
படுத்த படுக்கையில்
படுபாடு படுகிறார்
இன்றோ நாளையோ
அவர்
இறந்த பிறகு
தந்தி கொடுக்கிறோம்
தாராளமாய் வா.
இப்போது உடனே
இடத்தைக் காலிசெய்!'
்்்்்்்்்்்்
நகராதிருக்கும்
நம்பிக்கை
மோதும் குரலில்
முழக்கமிடுகிறது.
'உள்ளே நுழைவதைத்
தடுக்கிறீர்கள் . . .
எனது
உரத்த குரலினை
என்ன செய்வீர்கள்!'
பயமும் கவலையும்
பஞ்சினைத் தேடின . . .
என்
காதுகளை அடைக்கக்
கனத்த முயற்சிகள் . . .
குறுக்கீடுகளைத்
தாண்டி
நம்பிக்கை
குரல் கொடுக்கிறது!
'தோழனே!
ஓ! என் தோழனே!
நான் தான் உனது
நம்பிக்கை நண்பன்.
சுதந்திரக் கொடியின்
சுடரொளியாக
உச்சிக் கம்பத்தில்
உயரப் பறந்த நீ
ஏன் இப்போது
அரைக்கம்பத்தில்
இறங்கி
அழத் தொடங்குகிறாய்?
அவிழ்க்க முடியாமல்
உன்னை அவதிப்படுத்தும்
விரக்தியின் முடிச்சுக்களை
வெட்டியெறி.
உன்னுடைய
புண்களின் மீது
புன்னகையைத் தடவு
எதிர் காலத்தை
எழுதுவதற்கு
உன்
மனதில் பட்ட
காயங்களில்
மை தொட்டுக்கொள்.
போர்வைகளில்
ஏன் இப்படிப்
புதைந்து
கிடக்கிறாய்?
விழித்து நீ
எழுந்தால்
விலங்குகளே நொறுங்கும்
சின்ன நூற்கண்டா
உன்னைச்
சிறைப்படுத்தி வைப்பது?
்்்்்்்்்்்்்்
நம்பிக்கையின்
வார்த்தை மின்சாரம்
நரம்பில் பாய்ந்து
உறக்கத்தை
களைந்து
உசிப்பிட
விரக்திப் போர்வையை
வீசி எறிந்தேன்
கவலை பயங்களை
ஒரத்தில் விழும்படி
உதறி எழுந்தேன்
தடைகளை மீறித்
தாழ்ப்பாள் திறந்து
அருமை நண்பனை
உள்ளே
அழைத்தேன்
நானும்
நம்பிக்கையும்
கை குலுக்கிக்கொண்டு
நாற்காலிகளில்
அருகருகே
அமர்ந்திருக்க
எடுபிடி வேலை
செய்யத் துவங்கின
இதுவரை என்னை
ஏவிக்கொண்டிருந்த
கவலையும் பயமும்
தேநீர் கொண்டு வந்து
மேசையில் வைத்து
சர்க்கரை போதுமா
சார்? என்று கேட்டன.
சலனம்
பெருமூச்சோடு
காலிக் கோப்பைகளை
எடுத்துச் சென்று
கழுவி வைத்தது.
விரக்தி மட்டும்
ஒரு கெளரவமான
வில்லன் போல
விடை பெற்றுக் கொண்டு
வெளியேறியது !.
மு. மேத்தா
இந்த ஆக்கத்தை மற்ற
www.thamizmanam.com வாசகர்களுக்கு பரிந்துரைக்க நட்சத்திரங்களின்மேல் சொடுக்கவும்!
தற்போதைய பரிந்துரை நிலை:
Wednesday, August 03, 2005
ஒரு ஆமியின் தம்பி
வளாகம் போன புதிது. புதிய இடம். புதிய போதனை மொழி-ஆங்கிலம். புதிய பாவனை மொழி-சிங்களம்.( கடை கண்ணிக்கு போறதெண்டால் சிங்களம் வேணும்). சிங்களவர்களாக ஆமிக்காறனை மாத்திரம் தெரிந்த எங்களுக்கு சிங்கள ஊரில் சிங்கள மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் அனுபவம். புதிய நண்பர்கள் நண்பிகள் என்று எல்லாமே புதிது. ஒரு மாதகாலத்தில் எல்லாம் ஓரளவு பழக்கத்தில் வரத் தொடங்கியிருந்தது.
அன்றும் வழமை போல விரிவுரை சென்ற எமக்கு ஏதோ ஒரு இனம் புரியாத வேறுபாடு தெரிந்தது. நட்புடன் சிரிக்கும் எமது சிங்கள நண்பர்களின் முகம் இருண்டிருந்தது. வழக்கமான புன்னகை தொலைந்திருந்தது. பிறகுதான் தெரிந்தது காரணம். ஆனையிறவை புலிகள் பிடித்துவிட்டார்களாம். ஆயிரக்கணக்கில் ஆமி பலியாகிவிட்டதாம். எங்களுக்கு உள்ளுக்குள் வெற்றிப்பெருமிதம் தான். ஆனால் காட்டிக்கொள்ள முடியாது - இது அவங்கட ஊர். சிங்கள தேசத்தின் ஒவ்வொரு ஊரிலும் அழுகையொலி. பலியானவர்களில் எங்களது முதலாம் ஆண்டு மாணவனொருவனின் தமையனும் ஒருவனாம். ஒன்றாய் படிப்பவர்கள் என்ற முறையில் இறந்த வீட்டில் எல்லாரும் கலந்து கொள்ள பெரும்பான்மையின மாணவர்கள் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். தமிழ் மாணவர்கள் ஒருத்தரும் போவதில்லை என நாங்கள் முடிவெடுத்தோம். எப்படிப் போவது? எங்களைக் கொல்கிறவன் செத்ததுக்கு நாங்கள் என்னண்டு துக்கங்கொண்டாடுறது. ஆனாலும் சிலர் போனார்கள். அவர்கள் வந்தபின் நான் இதை பெரிய பிரச்சினையாக்கி சண்டை போட்டேன். ஒரு ஆமிக்காறனின் செத்த வீட்டுக்கு நீங்கள் எப்படி போக முடியும். கூட படிப்பவனின் அண்ணன் என்று சொன்னார்கள். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன இருந்தாலும் செத்தவன் ஒரு ஆமி என்பது தான் என் மனதில் இருந்தது.
கொஞ்ச காலத்தில் படிப்புச்சுமை இதை எல்லாம் மறக்கச் செய்திருந்தது. இரண்டாம் ஆண்டிலிருந்து பிரயோக வகுப்புக்கு நாங்கள் போக வேண்டும். எனக்கு அருகில் சந்தன. ஒரு சிங்கள மாணவன். இவனின் அண்ணன் தான் ஆமியில் இருந்து செத்தவன் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன். வசீகரமான புன்னகையும் நட்பான கதைகளும் என்னிடம் உள்ள சிங்கள வெறுப்பையும் தாண்டி நெருங்க வைத்தது. விடுதியிலும் அவன் பக்கத்து அறை. இது மேலும் எமது நட்பை இறுக்கியது. பிரயோக வகுப்பு எமக்கு எப்போதும் அரட்டை வகுப்புத்தான். பல விடயங்களும் எமது கதைகளில் வந்து போகும். அரசியல் உட்பட. ஆச்சரியமான விசயம் என்னவென்றால் தமிழர் பக்க நியாயங்களை அவன் ஏற்றுக் கொள்வதுதான். அரசாங்கம் எப்போதும் பொய்யே கூறுவதால் போர்ச்செய்திகளை அறிந்து கொள்ள அவன் எங்களிடம்தான் வருவான். படம் எல்லாம் கீறிக்காட்டி (சண்டை எங்கே நடக்குது எண்டு) உணர்ச்சிகளை மறைத்து செய்தியை செய்தியாக மட்டுமே சொல்லுவேன். அப்போதெல்லாம் அவர்களுக்கத்தான் இழப்புக்கூட. வாரவிடுமுறைக்காக வீடு சென்று வரும்போது அவன் கொண்டுவரும் அவர்களுக்கேயுரிய சாப்பாடு பலகாரங்கள் எல்லாம் சாப்பிட்டாக வேண்டும். இரண்டொருதரம் சந்தனவின் வற்புறுத்தலினால் அவனது வீட்டிற்கெல்லாம் சென்றிருக்கிறேன். சந்தனவின் தாயாரின் அன்பான உபசரிப்பு என்றைக்கும் மறக்கக்கூடியதல்ல.
இப்படியே போகையில் மூன்றாம் வருட பரீட்சை விடுமுறை வந்தது. எல்லோரும் விடுதியில் இருந்துதான் பரீட்சைக்கு தயார் செய்வது வழக்கம். சந்தனவை மட்டும் காணக்கிடைக்கவில்லை. விசாரித்துப் பார்த்தால் அவன் வீட்டுக்கு சென்றுவிட்டானாம். யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாமில் கடமையில் இருந்த அவனது இரண்டாவது தமையன் படுகாயமடைந்ததுதான் காரணம்.
இப்போது மட்டும் 'ஆமிதானே நல்லாப்படட்டும்' என்று ஏனோ என்னால் வழக்கம்போல் சந்தோசப்பட முடியவில்லை.
இந்த ஆக்கத்தை மற்ற
www.thamizmanam.com வாசகர்களுக்கு பரிந்துரைக்க நட்சத்திரங்களின்மேல் சொடுக்கவும்!
தற்போதைய பரிந்துரை நிலை:










